Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் 5 மாணவர்களுக்கு டைபாய்டு வைரஸ் காய்ச்சல்
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் 5 மாணவர்களுக்கு டைபாய்டு வைரஸ் காய்ச்சல்

Share:

கோத்தா பாரு, ஜூலை 03-

கிளந்தான் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி ஒன்றில் 22 மாணவர்களில் 5 பேர், typhoid வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகியிருப்பதை அம்மாநில சுகாதார இலாகா இயக்குநர் டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்துள்ளார்.

மற்ற மாணவர்களில் 17 பேர் பாசிர் புதே -வில் உள்ள தேங்கு அனிஸ் மருத்துவமனையிலும், தும்பட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

typhoid வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஜுன் 20 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கோத்தாபாரு சுகாதார அலுவலகம் சோதனை மேற்கொண்டது.. இதில் 22 மாணவர்களுக்கு typhoid காய்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக அவர் கூறினார்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், வயிற்று வலி, தலைவலி, உடல் அசதி மற்றும் உணவு உட்கொள்ள முடியாத நிலை போன்றவை typhoid -க்கான அறிகுறிகளாகும் என்று டாக்டர் ஜைனி ஹுசின் விளக்கினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்