கோத்தா திங்கி, ஜூலை.26-
லோரியினால் மோதப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.24 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, ஜாலான் சுங்கை கோத்தா திங்கி சாலையில் 60.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இதில் 18 வயது முகமட் அய்சி இக்பால் மற்றும் 19 வயது முகமட் ஐய்மான் ஃபார்ஹான் ஹாலிம் ஆகிய இரு இளைஞர்கள் உயிரிழந்ததாகப் போலீசார் அடையாளம் கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாலையில் பொதுமக்கள் தங்களுக்கு தகவல் அளித்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
அந்த இரு மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதித் தள்ளியதாக நம்பப்படும் லோரி இன்னும் அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்த இரு இளைஞர்கள் விபத்து நடந்த பகுதியில் வெவ்வேறு இடத்தில் கடுங்காயங்களுடன் இறந்து கிடந்தனர் என்று யூசோஃப் ஒத்மான் குறிப்பிட்டார்.








