Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புதிய உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் எங்கே ? - முகிதீன் கேள்வி
தற்போதைய செய்திகள்

புதிய உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் எங்கே ? - முகிதீன் கேள்வி

Share:

கடந்த ஜூலை 23 ஆம் நாள் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் (KPDN) பதவியில் இருந்த டத்தோ ஸ்ரீ சலாஹுடின் அயூப் இறந்ததைத் தொடர்ந்து அந்தப் பதவி இன்னும் காலியாகத் தொடர்ந்து நீடிப்பது ஏன் என டான் ஸ்ரீ முகிதின் யாசின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்நாட்டுச் சந்தையில் உணவுப் பொருட்களுக்கானத் தட்டுப்பாடு தற்போது நிலவத் தொடங்கி இருக்கும் இச்சமயத்தில், அந்தப் பதவி தொடர்ந்து காலியாகவே இருப்பதும் கால தாமதத்தை தொடர்ந்து அரசாங்கம் அனுமதிப்பதும் சரியான முடிவாகாது என பெரிக்காத்தான் நேஷனலின் தலைவருமான அவர் சுட்டிக் காட்டினார்.

தமது சொந்த ஆய்வின்படி, இதற்கு முன்னர் இவ்வாறான உணவுத் தட்டுப்பாடு, வாழ்க்கைச் செலவினம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை நாடு சந்தித்தது இல்லை என அவர் மேலும் கூறினார்.

Related News