ஜோகூர் பாரு, டிசம்பர்,24-
ஜோகூர் பாரு, தாமான் பெர்லிங்கில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு கிலோ போதைப்பொருளுடன் ஓர் ஆணும் பெண்ணும் பிடிபட்டனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் 55 வயது பெண்ணும், 42 வயது ஆடவரும் பிடிபட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா இடைக்கால போலீஸ் தலைவர் அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.
இருவர் பிடிபட்டது மூலம் பத்தாயிரம் ரிங்கிட்டுக்கும் கூடுதலான மதிப்பு கொண்ட 1,353. 41 கிராம் எடை கொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








