கோலாலம்பூர், ஜூலை.29-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமைப் பதவியிலிருந்து வீழ்த்துவதற்கு தொடர்ந்து குழி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதற்கு முன்பு, துன் அப்துல்லா அகமட் படாவி, டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆகியோர் பதவிலிருந்து வீழ்த்தப்படுவதற்கு குழி தோண்டிய வேலையை அன்வாருக்கும் அந்த முன்னாள் பிரதமர் செய்யக்கூடும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினரான புவாட் ஸர்காஷி தெரிவித்துள்ளார்.
வீதி ஆர்ப்பாட்டம் மூலம் அன்வாரை வீழ்த்த முடியாது என்று துன் மகாதீருக்கு நன்கு தெரியும், எனவே அன்வாரை வீழ்த்துதற்குப் புதிய வழிகளை அவர் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்ற்ர் இருப்பார் என்று புவாட் ஸர்காஷி குறிப்பிட்டார்.
நாட்டின் பிரதமர்களை வீழ்த்துவதே துன் மகாதீரின் தலையாயப் பணியாக மாறி வருகிறது. எனவே ஏதாவது ஒரு விவகாரத்தை அவர் எழுப்பிக் கொண்டே இருப்பார் என்று புவாட் ஸர்காஷி தெரிவித்தார்.








