சிலாங்கூர், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி ஒரு பெரிய மனிதருக்கு சொந்தமானது என்கிறார்கள். உண்மை அதுவல்ல. அது மக்களுக்கு சொந்தமான தொகுதி என்பதை நிரூபிக்க வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச்செய்யுமாறு அத்தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் அதன் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி புதிய எழுச்சியுடன் முன்னெடுப்பதற்கும்,ஒரு புதிய இலக்கை நோக்கி பயணிப்பதற்கும், அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கும் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் தம்மை வெற்றி பெற செய்யுமாறு ஒரு கல்விமானான டாக்டர் சிவபிரகாஷ், தொகுதி மக்களை கேட்டுக்கொண்டார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


