கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-
நாளை ஞாயிற்றுகிழமை கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெறவிருக்கும் ஹிம்புனான் டான் செலாவாட் மலேசியாகூ பெர்சாமா காஸா எனும் நிகழ்வில் மக்கள் தங்கள் ஆதரவை நல்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனர்களின் பேராட்டத்திற்கு மலேசிய மக்கள் தங்களின் பிளவுப்படாத ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் திளரக்கூடிய தலைவர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமன்றி இம்மாதம் இறுதியில் காஸாவிற்கு உதவிப் பொருட்களுடன் செல்லவிருக்கும் தன்னார்வலர்களை வழியனுப்பி வைக்கும் ஒரு தொடக்கமாகவும் இது அமையவிருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.








