Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நான்காவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தார் ரவிச்சந்திரன்
தற்போதைய செய்திகள்

நான்காவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தார் ரவிச்சந்திரன்

Share:

நாட்டின் தேசிய மலையேறும் வீரரான தி. ரவிச்சந்திரன், நான்காவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து மற்றொரு புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளார். கடந்த மே 17 ஆம் தேதி நேபாள நேரப்படி மதியம் 12 மணியளவில் இந்த சாதனையை ரவிச்சந்திரன் ஏற்படுத்தியுள்ளார் என்று அவரின் துணைவியார் லீலா ராமமூர்த்தி தெரிவித்தார்.

ரவிச்சந்திரன் நான்காவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்திய போதிலும், உறைபனி காரணமாக அவரின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் எவரெஸ்ட் சிகரத்திலிருந்து ஹெலிகாப்படர் மூலம் காட்மண்டுக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான், கோல பிலாவை சேர்ந்தவரான 58 வயதான ரவிச்சந்திரனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லீலா ராமமூர்த்தி வெளியிட்டுள்ள ஓர் அறிககையில் தெரிவித்துள்ளார்.

Related News