Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு 2025

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு 2025

நவ. 28-

எதிர்வரும் 2025 ஜனவரி 5 ஆம் தேதி திரெங்கானு பல்கலைக்கழகத்தில் அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு நடைபெறவிருக்கின்றது.

மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகம் முதல் முறையாக இந்த அனைத்துலகக் தமிழிளையோர் மாநாட்டை ஏற்று நடத்துகிறது. புரட்சியின் ஊற்று, தமிழிளையோர் கூற்று என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மாநாடு காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகத்தின் Sultan Mizan மண்டபத்தில் நடைபெறுகிறது.

முதன் முறையாக இளைஞர்களால் இளைஞர்களுக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் உலகத் தமிழிளையர்களின் அறிவார்ந்த கலந்துரையாடல், சொற்போர், கலைநிகழ்ச்சி என ஒரேகூரையின் கீழ் பெருவிழாவாக நடைபெறவிருக்கிறது.

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை என நான்கு நாடுகளிலிருந்து 40 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் சொற்போரின் இறுதி சுற்று ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

கல்வி, மின்னியல், சமூக நீதி மற்றும் பருவநிலை மாற்றம் எனும் நான்கு துணைக் கருப்பொருள்களின் அடிப்படையில் இந்த அனைத்துலகக் தமிழிளையோர் மாநாடு நடைபெறுகிறது

இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினர் பொது மக்களிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர். நிதி உதவி வழங்க ஆர்வம் கொண்டுள்ளவர்கள், அகப்பக்கம் வாயிலாக நிதி உதவியை வழங்கலாம் என்று மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினரகேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →