ஜன.5-
மாமன்னரைத் தொடர்புபடுத்தி முகநூலில் மறைமுகமானக் கருத்து தெரிவித்ததாக பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Ahmad Fadhli Shaari மீது அமானா இளைஞர் பிரிவு காவல்துறையில் புகார் அளிக்க உள்ளனர். ஆனால், Fadhli தனது கருத்தை மறுத்துள்ளார். அவர் வெளியிட்டக் கருத்து மன்னர் ஆட்சியை இழிவுபடுத்துவதாக அமானா இளைஞர் பிரிவு குற்றம் சாட்டுகின்றனர்.
நஜிப் ரசாக் ஆதரவுப் பேரணி தொடர்பாக மாமன்னர் ஆணைக்குப் பிறகு Fadhli யின் கருத்து வெளியிடப்பட்டது, இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது கவனக்குறைவா என்ற கேள்வியை எழுப்புகிறது என்று அமானா இளைஞர் பிரிவு கூறுகின்றனர். Fadhli பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








