Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை
அரசியல்

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

Share:

கோயில் விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, சட்டவிரோதக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் நாட்டின் சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயலும் எவராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒரு கோயில் நில விவகாரம் தொடர்பாக, சில தரப்பினர் சட்டவிரோத ஒன்றுகூடலை நடத்தத் திட்டமிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

"நமது நாட்டிற்கென தெளிவான சட்டத்திட்டங்கள் உள்ளன. எவருமே சட்டத்தை விட மேலானவர்கள் கிடையாது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்டத்தைக் கையில் எடுக்க முற்படுபவர்கள், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்," என்று அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று பெர்கேசோ (PERKESO) ஏற்பாடு செய்திருந்த 'KESUMA PERKESO LINDUNG 2026' இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட போது டத்தோஸ்ரீ ரமணன் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது, சுமார் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சமூகப் பாதுகாப்பு நன்மைகள் மற்றும் நன்கொடைகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டன.

Related News