Jun 25, 2026
Thisaigal NewsYouTube
முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி
அரசியல்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

Share:

அரசாங்கத்திற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கும் இடையே கையெழுத்தான 1.11 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையானால், ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, முதலில் தேட வேண்டிய நபர் பிரதமர் தான் என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

ஆனால், SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசாம் பாக்கி, தற்போது கேம்பிரிட்ஜில் பணியாற்றி வரும் தனது முன்னாள் உதவியாளர் James Chai- யைத் தேடுவதிலேயே குறியாக இருப்பதாக ரஃபிஸி விமர்சித்துள்ளார்.

தற்போது அரசியல் ஆய்வாளராக இருக்கும் ஜேம்ஸ் சாய், வெறும் விளக்கக் குறிப்புகளை மட்டுமே தயாரித்து வழங்கியவர் என்றும், அரசியல் காரணங்களுக்காக ஒரு இளைஞரைப் பிடிக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

பி.கே.ஆர் கட்சிக்குள் பிரதமர் விரும்பியபடி அரசியல் மாற்றங்கள் நிகழாததால், இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ரஃபிஸி தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related News