Oct 14, 2026
Thisaigal NewsYouTube

ஆயர் கூனிங் சட்டமன்றத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சி போட்டியிடலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஈப்போ, மார்ச்.05-

தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் போட்டியிடக்கூடும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்களின் கட்சி என்ற முறையில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான விவசாயிகளும், குடியானவர்களும் இருப்பதால் இந்த இடைத் தேர்தலில் பிஎஸ்எம் கட்சி தனது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தெரிவித்தார்.

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் , நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அறிவிக்கவிருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →