நடைபெறவிருக்கும் Sungai Bakap இடைத்தேர்தலில் Pakatan Harapan - னின் வேட்பாளராக பரிசீலிக்க கட்சியின் ஐந்து உறுப்பினர்களின் பெயர்களை PKR கட்சியின் தலைவருமான பிரதமர் Dato Sri Anwar Ibrahim - மிடம் பினாங்கு பிகேஆர் பரிந்துரைத்துள்ளது.
Nibong Tebal - லில் உள்ள கிளைகள் மற்றும் பிரிவுகளிலிருந்து திறமையான வேட்பாளர்களின் பெயர்களை மாநில தலைமை பெற்றிருப்பதாக பினாங்கு துணை துணை முதலமைச்சர் Mohamad Abdul Hamid கூறினார்.
Sungai Bakap மாநிலத் தொகுதி Nibong Tebal நாடாளுமன்ற தொகுதியின் கீழ் செயல்பட்டு வருவதுடன் இதில் 30 முதல் 60 வயதிற்கு உட்பட்ட வேட்பாளர்கள் இருப்பதாகவும் அதில் சிலர் உள்ளூர் மற்றும் வெளியாட்கள் என்று தெரியவந்துள்ளது.








