Oct 5, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: மெம்பான், சுங்கை ஊடாங் தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற பெர்சாத்து உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: மெம்பான், சுங்கை ஊடாங் தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற பெர்சாத்து உறுதி

மலாக்கா மாநில பெர்சாத்து கட்சியானது, கடந்த 2021-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மெம்பான் மற்றும் சுங்கை ஊடாங் சட்டமன்றத் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

எனினும், அந்த இரு தொகுதிகளின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும் பின்னர் பெர்சாத்து கட்சியிலிருந்து விலகி வாவாசான் கட்சியில் இணைந்துள்ளனர்.

இது குறித்து மலாக்கா பெர்சாத்துவின் தகவல் பிரிவு தலைவர் ஹிஷாமுடின் அப்துல் காரிம் கூறுகையில், மலாக்காவின் மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமாக 10 தொகுதிகளில் பெர்சாத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மெம்பான் மற்றும் சுங்கை ஊடாங் தொகுதிகளில் கட்சி தொடர்ந்து போட்டியிடும் என்பதில் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், வேறு கட்சியுடன் ஒத்துழைப்பு ஏற்பட்டாலும் பெர்சாத்து 10-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரமே முடிவடையக்கூடும் என்றும், அதன் பின்னரே போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் Bersatu சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் கீழ் மெம்பான் தொகுதியில் டாக்டர் யாட்ஸில் யாக்கோப்பும் சுங்கை ஊடாங் தொகுதியில் டாக்டர் அலீவ் யூசோஃப்பும் வெற்றி பெற்றனர்.

இருவரும் பின்னர் பெர்சாத்துவிலிருந்து விலகி வாவாசான் கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தலில் எதிரணிக் கட்சியுடன் கூட்டணியமைக்கும் பாரிசான்: பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஸாஹிட் தகவல்

மலாக்கா தேர்தலில் எதிரணிக் கட்சியுடன் கூட்டணியமைக்கும் பாரிசான்: பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஸாஹிட் தகவல்

மலாக்கா தேர்தலில் பாரிசான் சின்னத்தை பாஸ் பயன்படுத்த தடையில்லை - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா தேர்தலில் பாரிசான் சின்னத்தை பாஸ் பயன்படுத்த தடையில்லை - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: அக்டோபர் 31-ல் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: அக்டோபர் 31-ல் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கிறது பக்காத்தான் ஹராப்பான்

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கிறது பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலானில் ஆட்சிக் குழு இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் - அருள் குமார் தகவல்

நெகிரி செம்பிலானில் ஆட்சிக் குழு இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் - அருள் குமார் தகவல்

மலாக்கா தேர்தல்: அம்னோ–பாஸ் பேச்சு சுமுகமாக நடக்கிறது

மலாக்கா தேர்தல்: அம்னோ–பாஸ் பேச்சு சுமுகமாக நடக்கிறது