Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அவரவர் சொந்த வழிகளைத் தேடிக் கொள்வதற்கு உரிமை உள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அவரவர் சொந்த வழிகளைத் தேடிக் கொள்வதற்கு உரிமை உள்ளது

கோலாலம்பூர், மே.31-

அம்னோவிலிருந்து விலகி, பிகேஆர் கட்சியில் இணைய் போவதாக அறிவித்துள்ள அமைச்சர் ஸாஃப்ருல் அப்துல் அஸிஸை, அம்னோவைச் சேர்ந்த பலர் குறை கூறி வரும் வேளையில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தற்காத்துப் பேசினார்.

ஸாஃப்ருல் அப்து அஸிஸ் எடுத்துள்ள முடிவு ஆச்சரியப்படுவதற்கோ, அதிர்ச்சி அடைவதற்கோ ஒன்றுமில்லை என்று வெளியுறவு அமைச்சரான முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

அவரவர் தங்கள் அரசியல் பாதையைத் தேர்வு செய்து கொள்வதற்கும், தங்களின் அறிவு சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கும் உரிமை உள்ளது என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

ஓர் அரசியல் கட்சி என்றால் மக்கள் உறுப்பினராக வருவதும், வெளியேறுவதும் வழக்கமான ஒன்றாகும். இதில் குறைகூறுவதற்கு ஒன்றுமில்லை என்று முகமட் ஹசான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →