Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
அரசியல்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Share:

தபுங் ஹாஜி தொடர்பில், அரச விசாரணை ஆணையமான ஆர்.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையை விவாதிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

உடல்நலக் குறைவு காரணமாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதால், இன்றைய சிறப்புக் கூட்டத்தில் அவரால் பங்கேற்க இயலவில்லை.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடீன் ஹாசன், அவை விதி 11(3)-ஐ மேற்கோள்காட்டி, தபுங் ஹாஜி தொடர்பான ஆர்.சி.ஐ அறிக்கை பொதுமக்களின் முக்கிய அக்கறைக்குரிய விவகாரம் என்பதால், பிரதமர் நேரடியாக அவையில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், பிரதமர் தனது பணிக்குத் திரும்பிய பின்னர் இந்த அறிக்கையை அவரே நேரடியாகத் தாக்கல் செய்து, அதன் மீதான விவாதத்திலும் கலந்துகொள்வதே பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற சபாநாயகர் தான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல், துணைப் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் அவையில் இருப்பதால், பிரதமர் இல்லாத நிலையிலும் சிறப்புக் கூட்டத்தைத் தொடர முடியும் என்றார்.

மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால், அவற்றை, தொடர்புடைய நாடாளுமன்றக் குழுக்கள் பின்னர் ஆய்வு செய்ய முடியும் என்றும் ஜோஹாரி அப்துல் குறிப்பிட்டார்.

அதேவேளையில், அவை விதியை மீண்டும் மேற்கோள்காட்டிய அவர், நாடாளுமன்றத்தில் அலுவல் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, எதிர்க்கட்சிகள், விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தக்கியுடீன் ஹாசன் தெரிவித்ததைத் தொடர்ந்து, விவாதத்தில் பங்கேற்க விரும்பாத உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறலாம் என்று சபாநாயகர் ஜோஹாரி அப்துல் அறிவித்தார்.

இதன் காரணமாக, பெரும்பான்மையான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்