Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்
அரசியல்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

Share:

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே வோங் சென், பி.கே.அர் கட்சியிலிருந்து இருந்து விலகி பெர்சமா கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

பூச்சோங், தாமான் புத்ரா பெர்டானா-வில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெர்சமா தலைவர் ரஃபிஸி ரம்லி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் 20 ஆண்டுகளாக பி.கே.அர் கட்சியிலிருந்த வோங் சென்,ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமத் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை விட்டு விலகி Bersama கட்சிக்கு தலைமை ஏற்றதைத் தொடர்ந்து, தானும் இறுதியில் பி.கே.அர்-ல் இருந்து விலகுவதாக முன்பே தெரிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற Bersama கட்சியின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றதைத் தொடர்ந்து, மை காஸ் என்ற தொகுதி நிதி இணையதளத்திற்கான அணுகல் ரத்து செய்யப்பட்ட மூன்று PKR நாடாளுமன்ற உறுப்பினர்களில் வோங் சென்-மும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்