Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்
அரசியல்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில், தற்போது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இது குறித்து பிரதமரின் மூத்த ஊடகச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடா இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்வார் இப்ராஹிம் இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் சுமூகமாக நடைபெறவும், அவர் நீண்டகாலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து விரைவில் வழக்கம்போல் தனது பணிகளைத் தொடரவும் பிரார்த்திப்போம் என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த அறிக்கையில், பிரதமர் மேற்கொண்டு வரும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளின் தன்மை குறித்த எந்தவொரு விவரமும் வெளியிடப்படவில்லை

Related News

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் - நேரில் விளக்கம் கேட்கிறார் ஸாஹிட்