Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசானுடன் தொகுதி பரிமாற்றத்துக்கு பெரிக்காத்தான் நேஷனல் தயார்
அரசியல்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசானுடன் தொகுதி பரிமாற்றத்துக்கு பெரிக்காத்தான் நேஷனல் தயார்

Share:

எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் உடன் தொகுதி பரிமாற்றம் உள்ளிட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பெரிக்காத்தான் நேஷனல் தயாராக இருப்பதாக அதன் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை என்றும் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பாரிசான் நேஷனல் கூட்டணித் தலைவர் அஹ்மத் சாஹித் ஹமிடியும் தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி பரிமாற்றம் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு பாரிசான் தயாராக இருப்பதாக நேற்று சனிக்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த தேர்தலில் பாரிசான் வென்ற 21 தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

என்றாலும், மாநிலத்தின் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, ரெம்பியா (Rembia) சட்டமன்ற உறுப்பினர் ஜைலானி காமிஸ் அம்னோவிலிருந்து விலகி பாஸ் கட்சியில் இணைந்ததால், தற்போது பாரிசானிடம் 20 தொகுதிகளே உள்ளன.

மலாக்கா மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்