Sep 21, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு
அரசியல்

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

Share:

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகத் தனது மூத்த மகள் நூருல் இசா எடுத்துள்ள முடிவை அதன் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நல்லமுறையில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அலோர் காஜாவில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், நூருல் இசா தனது உயர் படிப்பைத் தொடர்வதற்காக வெளிநாடு செல்லவிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும், பதவி விலகினாலும் அவர் கட்சியில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுவார் என்றும் கூறினார். முன்னதாக, கட்சிப் பதவியைத் துறந்தாலும் அன்வாரின் தலைமையிலான பிகேஆர் கட்சியின் போராட்டங்களுக்குத் தனது ஆதரவு என்றும் இருக்கும் என நூருல் இசா நேற்று உறுதியளித்திருந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் ரஃபிஸி ரம்லியைத் தோற்கடித்து நூருல் இசா இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது தற்காலிகத் துணைத் தலைவராகச் செயல்படும் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி ஆகியோர் கட்சியின் பணிகளைத் திறம்பட வழிநடத்துவார்கள் என நூருல் இசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்