Sep 21, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்
அரசியல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

Share:

நெகிரி செம்பிலானில் ஆட்சித் தரப்புக்கும் அரண்மனைக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், மாநில சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் ஆட்சியாளரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று அமானா கட்சி வலியுறுத்தியுள்ளது.

அமானா பொதுச் செயலாளர் ஃபாய்ஸ் ஃபட்சில் கூறுகையில், தற்போதைய அரசியல் குழப்பம் நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறினார்.

யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனத்தையும் உடனடியாக ரத்து செய்திருப்பது, நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி பதவியேற்று, துவாங்கு முஹ்ரிஸ் மற்றும் அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுத்திருந்தனர்.

அவர்கள் தங்களது உறுதிமொழியை மீறியதாகக் கண்டறிந்ததையடுத்து, அவர்களின் நியமனத்தை துவாங்கு முஹ்ரிஸ் ரத்து செய்ததாக நெகிரி செம்பிலான் அரண்மனை தெரிவித்துள்ளது.

Related News

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு