Sep 21, 2026
Thisaigal NewsYouTube
ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்
அரசியல்

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை தனது ஆலோசனை அல்லது அதிகாரப்பூர்வ கோரிக்கை இல்லாமல் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாங் டி-பெர்துவான் பெசாருக்கு அரசியலமைப்பின் கீழ் இல்லை என்று மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

மாநில அரசியலமைப்பின்படி, மாநில நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் ஆட்சியாளர், மந்திரி பெசார் மற்றும் மாநில ஆட்சிக்குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும், ஆட்சிக்குழு உறுப்பினரை ஒருதலைப்பட்சமாக பதவி நீக்கும் அதிகாரம் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எனவே, தனது ஆலோசனை அல்லது கோரிக்கையின்றி ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியை முடிவுக்குக் கொண்டு வருவது சட்டரீதியாகத் தவறானதும், அரசியலமைப்புக்கு முரணானதுமாகும் என்று இஸ்மாயில் தெரிவித்தார்.

இதனிடையே, நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், பதவிப் பிரமாணத்தையும் விசுவாச உறுதிமொழியையும் மீறியதாகக் கூறி, மாநிலத்தின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களையும் உடனடியாக ரத்து செய்ததாக அரண்மனை நேற்று அறிவித்தது.

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, புதிய உறுப்பினர்களின் பட்டியலை மந்திரி பெசார் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, துவாங்கு முஹ்ரிஸை யாங் டி-பெர்துவான் பெசார் பதவியில் இருந்து நீக்கியதாகக் கூறப்படும் அறிக்கையை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூட்டாக வெளியிட்டிருந்தனர்.

அந்த அறிக்கை அரசியலமைப்புக்கு முரணானதும் செல்லாததுமாகும் என்றும், துவாங்கு முஹ்ரிஸே தொடர்ந்து நெகிரி செம்பிலானின் ஆட்சியாளராக உள்ளார் என்றும் மாநில டேவான் கெஅடிலான் டான் உண்டாங் தெரிவித்திருந்தது.

அரசுத் தலைமைச் சட்ட ஆலோசகர் அலுவலகமும், மந்திரி பெசாருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கும் மாநில ஆட்சியாளரின் பதவியை ஒருதலைப்பட்சமாக காலி செய்யும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

Related News

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

ராஜினாமா முடிவு குறித்து அந்தோணி லோக்கை சந்திக்கிறார் அன்வார்: இருவரும் சீனப் பயணத்தின் போது ஆலோசிக்க வாய்ப்பு

ராஜினாமா முடிவு குறித்து அந்தோணி லோக்கை சந்திக்கிறார் அன்வார்: இருவரும் சீனப் பயணத்தின் போது ஆலோசிக்க வாய்ப்பு

அந்தோணி லோக் ராஜினாமா முடிவு: ‘பட்டாசு அரசியல்’ என சனுசி நோர் விமர்சனம்

அந்தோணி லோக் ராஜினாமா முடிவு: ‘பட்டாசு அரசியல்’ என சனுசி நோர் விமர்சனம்

ஜசெக வெளியேற வேண்டும் என சில தரப்பினர் காத்திருக்கின்றனர் – அந்தோணி லோக்

ஜசெக வெளியேற வேண்டும் என சில தரப்பினர் காத்திருக்கின்றனர் – அந்தோணி லோக்

நஜிப் நிதி திரட்டுவது ஊழலை மன்னிக்கும் கலாசாரத்தை உருவாக்கும் – பிகேஆர் மகளிர் பிரிவு

நஜிப் நிதி திரட்டுவது ஊழலை மன்னிக்கும் கலாசாரத்தை உருவாக்கும் – பிகேஆர் மகளிர் பிரிவு