Sep 21, 2026
Thisaigal NewsYouTube
அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்
அரசியல்

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்திப்பு… ஒரு மணி நேரத்துக்குப் பின் வெளியேறினார்

Share:

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைச் சந்தித்துவிட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் இஸ்தானா ஹிங்காப்பிலிருந்து புறப்பட்டார்.

கோலாலம்பூர் புக்கிட் பெர்சேகுதுவானில் உள்ள அரண்மனைக்கு இன்று மாலை சென்ற அன்வார், மாலை 6.57 மணிக்கு போலீஸ் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றார்.

நெகிரி செம்பிலானில் ஆட்சியாளரின் நிலை மற்றும் அரசியல் சாசன விவகாரம் தொடர்பாக நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நெகிரி செம்பிலான் ஆட்சியாளரைப் பதவியிலிருந்து அகற்றுவது சாதாரண விவகாரம் அல்ல என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் சாசனத்துக்கும் முறையான நடைமுறைகளுக்கும் முழுமையாக உட்பட்டிருக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பின் முடிவுகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி தீவிரம்… சட்டமன்றத்தைக் கலைக்க மந்திரி பெசார் கோர வேண்டும் என அமானா வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் அரசியல் சாசன விவகாரம்… மத்திய அரசு தலையிட 10 மலேசிய வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர்கள் வலியுறுத்தல்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு… ‘விசில்’ ஒலிக்கக் காத்திருக்கும் உறுப்பினர்கள்

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

அந்தோணி லோக்கின் பதவி விலகல் முன்வரவு… ஜசெக மத்தியச் செயலவை முடிவு இறுதியானது

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவிகள் இரத்து - ஆட்சியாளர் அதிரடி உத்தரவு

அரண்மனையில் அன்வார் – துவாங்கு முஹ்ரிஸ் நேருக்கு நேர் சந்... | Thisaigal News