Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து
அரசியல்

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

Share:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம்-ன் 79ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நாட்டை வழிநடத்தும் ஞானம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என அவர் தமது பிரார்த்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளையில், நாட்டிற்க்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அரசாங்கத்தின் சீர்திருத்தத் திட்டங்களுக்கு சிவில் சேவை தொடர்ந்து உறுதியான ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமர் அலுவலகமும் காணொளி ஒன்றின் மூலம் அன்வாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

“முயற்சிகள் தொடர்கின்றன, நம்பிக்கை நிறைவேற்றப்படுகிறது, இறைவனின் மீது நம்பிக்கை வைக்கிறோம்” என்ற செய்தியும் அதில் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, மலேசியா மடானி முகநூல் பக்கமும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இறைவனின் பாதுகாப்பும் அருளும் எப்போதும் அவருக்கு கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்துள்ளது.

நாட்டுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து உழைக்க தேவையான வலிமை பிரதமருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளது.

Related News

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

கோலா கங்சார் பெர்சாத்து துணைத் தலைவர் உட்பட 8 கிளைத் தலைவர்கள் வெளியேறினர்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்  - அம்னோ திட்டவட்டம்

நஜிப் விடுதலையடைய சட்டத்தின் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் - அம்னோ திட்டவட்டம்

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

“வெட்கப்பட வேண்டியதில்லை” – குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களுக்கு அக்மால் ஆதரவு

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்

"இஸ்மாயில் லாசிம் தாமாக முன்வந்து தான் கையெழுத்திட்ட்டார்" - உண்டாங் வழக்கறிஞர்கள் தகவல்