Oct 31, 2026
Thisaigal NewsYouTube

அசாஹான் தொகுதியில் பக்காத்தான் சார்பில் களமிறங்குகிறார் டினேஷ் பாலசுப்ரமணியம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அசாஹான் தொகுதியில் பக்காத்தான் சார்பில் களமிறங்குகிறார் டினேஷ் பாலசுப்ரமணியம்

மலாக்கா மாநிலத் தேர்தலில் அசாஹான் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் டினேஷ் பாலசுப்ரமணியம், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேட்பாளர் எண் 2-க்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் நவம்பர் 14-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தீபாவளிக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு வருவதால் வாக்காளர்கள் திரண்டு வந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அடுத்த 14 நாட்களுக்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமது ஆதரவாளர்கள் யாருடனும் வாக்குவாதம் அல்லது மோதலில் ஈடுபட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், மக்களின் தேவைகள் மற்றும் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை முன்னிறுத்தி அமைதியான முறையில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் தமக்கு ஆதரவளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த டினேஷ், அடுத்த 14 நாட்களும் பிரச்சாரப் பணிகளில் கவனம் செலுத்தி, அமைதியான முறையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: புக்கிட் கத்தில் தொகுதியில் நான்கு முனைப் போட்டி – மூன்றாவது தவணையை குறிவைக்கும் அட்லி ஸஹாரி

மலாக்கா தேர்தல்: புக்கிட் கத்தில் தொகுதியில் நான்கு முனைப் போட்டி – மூன்றாவது தவணையை குறிவைக்கும் அட்லி ஸஹாரி

மலாக்கா தேர்தல்: கிளேபாங் தொகுதியில் நான்கு முனைப் போட்டி

மலாக்கா தேர்தல்: கிளேபாங் தொகுதியில் நான்கு முனைப் போட்டி

மலாக்கா தேர்தலில் பயா ரூம்புட் தொகுதியில் மும்முனைப் போட்டி - அன்வாரின் அரசியல் செயலாளர் களமிறங்குகிறார்

மலாக்கா தேர்தலில் பயா ரூம்புட் தொகுதியில் மும்முனைப் போட்டி - அன்வாரின் அரசியல் செயலாளர் களமிறங்குகிறார்

பலமுனைப் போட்டி பக்கத்தான் ஹராப்பானுக்கு சாதகமாக அமையும் – அட்லி ஸஹாரி

பலமுனைப் போட்டி பக்கத்தான் ஹராப்பானுக்கு சாதகமாக அமையும் – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டி: 24 வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டி: 24 வேட்பாளர்கள் அறிவிப்பு

சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது