மலாக்கா மாநிலத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுவது, பக்கத்தான் ஹராப்பானின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று அதன் மாநிலத் தலைவர் அட்லி ஸஹாரி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது தங்களுக்குப் பாதகமாக இருக்காது என்றும், நேரடிப் போட்டியைவிட கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 24 இடங்களில் பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடுகிறது. இதில் பெர்சாத்து கட்சியுடன் நான்கு தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.
பிற கட்சிகள் எங்கு போட்டியிடுகின்றன என்பதைப் பொருட்படுத்தாமல், தங்களது தேர்தல் தயாரிப்புகளின் அடிப்படையிலேயே தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அட்லி ஸஹாரி குறிப்பிட்டார்.








