Oct 29, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்ததா? – அருள் குமார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்ததா? – அருள் குமார்

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 26ஆம் தேதி நடைபெறுவதற்கும், மறுநாள் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கும் ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்துள்ளதா என ஜசெக மாநிலத் தலைவர் ஜே. அருள் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றக் கூட்டத் தேதி மாநில ஆட்சிக் குழுவால் தீர்மானிக்கப்பட்ட பின்னர், நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வக் கேள்விகளைத் தயாரிக்க முன்னதாகவே அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டத்துக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதமே வழங்கப்பட்டதாகவும் நீலாய் சட்டமன்ற உறுப்பினரான அருள் குமார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →