மலாக்கா மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சி, முன்பு அறிவித்த ஒன்பது தொகுதிகளுடன் மேலும் ஒரு தொகுதியைச் சேர்த்து, மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுஸியா சாலே, ஆயர் லிமாவ் தொகுதியில் பணி ஓய்வுப் பெற்ற மேஜர் ஜைமி டிமோன் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று தெரிவித்தார்.
இதன் மூலம், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இதுவரை போட்டியிடவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 21இலிருந்து 22ஆக அதிகரித்துள்ளது. எனினும், பிற கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டால் இந்த எண்ணிக்கை மாறக்கூடும்.
2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி அதிகபட்ச விலைத் திட்டம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஃபுஸியா இதனைத் தெரிவித்தார்.








