Oct 29, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய 28 மையங்கள் திறப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய 28 மையங்கள் திறப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளான வரும் அக்டோபர் 31ஆம் தேதி, 28 மையங்கள் திறக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பாளர், முன்மொழிபவர், வழிமொழிபவர் ஆகிய மூவரில் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவரும் நேரில் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இட்ருஸ் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் தேவையான படிவங்களை முன்கூட்டியே பூர்த்தி செய்து, வைப்புத்தொகையைச் செலுத்தி, அதற்கான ரசீதையும் வேட்புமனு தாக்கல் நாளன்று கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவதுடன், வேட்புமனு மையத்தின் 50 மீட்டர் எல்லைக்குள் தேவையின்றி தங்கியிருப்பது, வாகனங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி அரசியல் பிரசாரம் செய்வது போன்ற தேர்தல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →