Oct 28, 2026
Thisaigal NewsYouTube

செம்பிலானில் சர்ச்சைக்குரிய உண்டாங் தலைவர்களின் நீக்கம் அரசிதழில் பதிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
செம்பிலானில் சர்ச்சைக்குரிய உண்டாங் தலைவர்களின் நீக்கம் அரசிதழில் பதிவு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுங்கை உஜோங், ஜெலுபு பகுதிகளின் முன்னாள் உண்டாங் தலைவர்களின் நீக்கம், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் உத்தரவின் பேரில் அதிகாரபூர்வமாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழ்களின்படி, டத்தோ முபாராக் டோஹாக், டத்தோ மாரோஃப் மாட் ரஷாட் ஆகியோரின் நீக்கங்கள் முறையே 2025 மே 13 மற்றும் 2023 மே 31 முதல் அமலுக்கு வந்தன. முன்னாள் டத்தோ ஷாபண்டார் டத்தோ ஶ்ரீ பஹாருடின் அப்துல் காலிட்டின் நீக்கமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டத்தோ முஹமட் ஃபாரிஸ் ஜொஹாரி சுங்கை உஜோங் உண்டாங் தலைவராகவும், டத்தோ ஹசான் அப்துல் ஹாமிட் ரெம்பாவ் உண்டாங் தலைவராகவும் நியமிக்கப்பட்டதும் அரசிதழில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →