மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பெர்சாத்து கட்சி போட்டியிடும் என்று அதன் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார். எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த விவரங்கள் வரும் வியாழக்கிழமை, அக்டோபர் 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் திங்கட்கிழமை இரவு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முஹிடின் தெரிவித்தார். போட்டியிடவுள்ள தொகுதிகள் தொடர்பான சில விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்பட வேண்டியிருப்பதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் அவை இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பெர்சாத்து மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அதிகாரபூர்வக் கடிதம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று முஹிடின் தெரிவித்தார். பெர்சாத்து எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.








