பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை இடைநிறுத்தவும், ரத்து செய்யவும், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், கூட்டணி வழக்கம் போல் செயல்படலாம் என அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உத்தரவை எதிர்த்து சங்கங்களின் பதிவுத்துறையான ஆர்ஓஎஸ் (RoS) மற்றும் உள்துறை அமைச்சர் மேல்முறையீடு செய்திருந்தாலும், அதனால் நீதிமன்ற உத்தரவு தானாகவே நிறுத்தப்படாது என்றார்.
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனியாகத் தடை உத்தரவு பிறப்பிக்காதவரை, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றும், அக்டோபர் 25-ஆம் தேதி இரவு அதன் உச்சமன்ற அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கும் எந்தத் தடையும் இல்லை என்றும் தக்கியுதீன் தெரிவித்துள்ளார்.








