Oct 25, 2026
Thisaigal NewsYouTube

"தொகுதிப் பங்கீட்டில் தலையிட வேண்டாம்" - ஜசெகவிற்கு மசீச தலைவர்கள் எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
"தொகுதிப் பங்கீட்டில் தலையிட வேண்டாம்" - ஜசெகவிற்கு மசீச தலைவர்கள் எச்சரிக்கை

வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் பாரிசான் நேஷனல் முயற்சிகளில் ஜசெக தலையிட வேண்டாம் என இரு மசீச தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மசீச பொதுச் செயலாளர் சோங் சின் வூன் கூறுகையில், இந்த விவகாரத்தைத் தீர்க்க பாரிசான் நேஷனலுக்குத் தனிப்பட்ட வழிமுறைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், மசீச இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் மைக் சோங் கூறுகையில், தங்களது அரசியல் முடிவுகளைத் தீர்மானிக்க ஜசெகவின் உதவி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மலாக்காவில் பெர்சத்துவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், ஜசெக தனது உள்கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என சோங் சின் வலியுறுத்தியுள்ளார்.

பெர்சத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என மலாக்கா ஜசெக தலைவர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில், தற்போதைய நிலைமை அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
16-ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழக்கும், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்கும்: சனுசி நோர் கணிப்பு

16-ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழக்கும், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்கும்: சனுசி நோர் கணிப்பு

மலாக்கா தேர்தல்: 9 தொகுதிகளில் போட்டியிட்ட அமனாவுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு

மலாக்கா தேர்தல்: 9 தொகுதிகளில் போட்டியிட்ட அமனாவுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டி

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டி

மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தானுக்கு 7 தொகுதிகள் மட்டுமே! முடிவில் உறுதியாக இருக்கும் அம்னோ தலைவர்

மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தானுக்கு 7 தொகுதிகள் மட்டுமே! முடிவில் உறுதியாக இருக்கும் அம்னோ தலைவர்

அபு பக்காருடன் பேச்சு வார்த்தை நடத்த பெரிக்காத்தான் நேஷனல் முடிவு

அபு பக்காருடன் பேச்சு வார்த்தை நடத்த பெரிக்காத்தான் நேஷனல் முடிவு

சரவாக் சட்டமன்றம் வரும் திங்கட்கிழமை கலைப்பு: 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல்!

சரவாக் சட்டமன்றம் வரும் திங்கட்கிழமை கலைப்பு: 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல்!

"தொகுதிப் பங்கீட்டில் தலையிட வேண்டாம்" - ஜசெகவிற்கு மசீச ... | Thisaigal News