பெர்சத்து கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்காருடன் பேச்சு வார்த்தை நடத்த பெரிக்காத்தான் நேஷனல் முடிவு செய்துள்ளது.
இதற்காக அபு பக்காருக்கு சந்திப்புக் கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக பெரிக்காத்தான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பேச்சு வார்த்தையில் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும், மாநில நிர்வாகத்தில் பாஸ் கட்சி இடம் பெறாவிட்டாலும், பெர்லிஸ் அரசாங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அபு பக்கார் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் பெர்சத்து உறுப்பினராகவே இருப்பதாகவும், வேறொரு கட்சியில் இணைந்தால் கட்சி தாவலாகக் கருதப்படும் என்றும் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.








