பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்ததைத் தொடர்ந்து, அதன் உச்சமன்றக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. கூட்டணியின் உறுப்புக் கட்சியான பெர்சாத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கூட்டங்களை நடத்தவும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடரவும் வழி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மலாக்கா மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் தனது சொந்தச் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஸ் கட்சிக்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையிலும், பெர்சாத்து கூட்டணியின் உறுப்புக் கட்சியாகத் தொடர்வதால் கூட்டத்துக்கு அழைக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.








