Oct 22, 2026
Thisaigal NewsYouTube

பெரிக்காத்தான் நேஷனல் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தடை! மலாக்கா தேர்தலில் போட்டியிட அனுமதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரிக்காத்தான் நேஷனல் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தடை! மலாக்கா தேர்தலில் போட்டியிட அனுமதி

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைப் பதிவு நீக்கம் செய்த சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS நடவடிக்கைக்கு எதிராக, அந்தக் கூட்டணி தாக்கல் செய்த மனுவில், அக்கூட்டணிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிபதி அஸிஸான் முஹமட் அர்ஷாட் பிறப்பித்த இந்த உத்தரவால், நீதிமன்ற மறுஆய்வு வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை பெரிக்காத்தான் நேஷனல் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடரவும், நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடவும் வழி ஏற்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், தேர்தலில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால் அதைச் சரிசெய்வது கடினம் என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது.

சட்டத்தை மீறும் நடவடிக்கைகள் இடம் பெற்றால், சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், தடை உத்தரவால் எதிர்மனுதாரர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, பெரிக்காத்தான் நேஷனலின் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ROS உத்தரவிட்டிருந்தது. பின்னர், அக்டோபர் 20ஆம் தேதி அந்தக் கூட்டணி பதிவு நீக்கம் செய்யப்பட்டதாக ROS அறிவித்தது.

இந்த நடவடிக்கைகளை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் நீதிமன்ற மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. தற்போதைய உத்தரவு பதிவு நீக்க நடவடிக்கையின் சட்டபூர்வத்தன்மையைத் தீர்மானிக்கவில்லை என்றாலும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு, தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் விரைவில்! பெர்சாத்துவுக்கும் அழைப்பு

பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் விரைவில்! பெர்சாத்துவுக்கும் அழைப்பு

மலாக்கா தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் திட்டம்

மலாக்கா தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் திட்டம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

பெர்சாத்து கட்சியின் இடைநீக்க முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் - மந்திரி பெசார் அபு பக்கார் உறுதி

பெர்சாத்து கட்சியின் இடைநீக்க முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் - மந்திரி பெசார் அபு பக்கார் உறுதி

சரவாக் சட்டமன்றம் இவ்வாரமே கலைக்கப்படுமா? வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனப் பரபரப்பு

சரவாக் சட்டமன்றம் இவ்வாரமே கலைக்கப்படுமா? வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனப் பரபரப்பு

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர்: நியமன ரத்து முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர்: நியமன ரத்து முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மனு