Oct 23, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் பிரசார இயக்குநராக அப்துல் ரவூஃப் யுசோ நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் பிரசார இயக்குநராக அப்துல் ரவூஃப் யுசோ நியமனம்

மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் பிரசாரப் பணிகளை வழிநடத்தும் தேர்தல் இயக்குநராக டத்தோ ஶ்ரீ அப்துல் ரவூஃப் யுசோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசானுக்குப் பதிலாக அப்துல் ரவூஃப் யுசோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்துக்கு, நேற்றிரவு ஆயர் குரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கூட்டணியின் தலைமைத்துவக் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் முஹமட் ஹசான், தேர்தல் பிரசாரக் காலத்தில் பல வெளிநாட்டுப் பயணங்களிலும் முக்கியக் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியிருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதும், வட்டாரக் கூட்டங்களில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அடங்கும் என்றும் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
“ரஃபிஸி மீது வழக்குத் தொடர்ந்தால் மக்களுக்குத்தான் சுமை!” – ரமணன் சாடல்

“ரஃபிஸி மீது வழக்குத் தொடர்ந்தால் மக்களுக்குத்தான் சுமை!” – ரமணன் சாடல்

பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் விரைவில்! பெர்சாத்துவுக்கும் அழைப்பு

பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் விரைவில்! பெர்சாத்துவுக்கும் அழைப்பு

பெரிக்காத்தான் நேஷனல் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தடை! மலாக்கா தேர்தலில் போட்டியிட அனுமதி

பெரிக்காத்தான் நேஷனல் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தடை! மலாக்கா தேர்தலில் போட்டியிட அனுமதி

மலாக்கா தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் திட்டம்

மலாக்கா தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் திட்டம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

பெர்சாத்து கட்சியின் இடைநீக்க முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் - மந்திரி பெசார் அபு பக்கார் உறுதி

பெர்சாத்து கட்சியின் இடைநீக்க முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் - மந்திரி பெசார் அபு பக்கார் உறுதி