Oct 23, 2026
Thisaigal NewsYouTube

சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான முக்கிய அறிவிப்பு: இன்று பிற்பகலில் வெளியிடுகிறார் அபாங் ஜொஹாரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான முக்கிய அறிவிப்பு: இன்று பிற்பகலில் வெளியிடுகிறார் அபாங் ஜொஹாரி

சரவாக் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை, அம்மாநில முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி ஓபேங் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் காம்ப்லெக்ஸ் சத்ரியா பெர்திவியில் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பை அவர் நடத்தவுள்ளார்.

முன்னதாக, மாநில ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாஃபாரைச் சந்தித்து, சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலைப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவடைகின்றது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஜிபிஎஸ் எனப்படும் கபுங்கான் பார்ட்டி சரவாக் கூட்டணி 82 இடங்களில் 76 இடங்களைக் கைப்பற்றியது. மீதமுள்ள இடங்களை ஜசெக கட்சி தக்க வைத்தது.

இந்நிலையில், அடுத்த மாநிலத் தேர்தல் டிசம்பர் 12 முதல் 19ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என மாநில சுற்றுலா, கலை, புத்தாக்கத்துறை அமைச்சர் அப்துல் காரிம் ரஹ்மான் ஹம்ஸா ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் பிரசார இயக்குநராக அப்துல் ரவூஃப் யுசோ நியமனம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் பிரசார இயக்குநராக அப்துல் ரவூஃப் யுசோ நியமனம்

“ரஃபிஸி மீது வழக்குத் தொடர்ந்தால் மக்களுக்குத்தான் சுமை!” – ரமணன் சாடல்

“ரஃபிஸி மீது வழக்குத் தொடர்ந்தால் மக்களுக்குத்தான் சுமை!” – ரமணன் சாடல்

பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் விரைவில்! பெர்சாத்துவுக்கும் அழைப்பு

பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் விரைவில்! பெர்சாத்துவுக்கும் அழைப்பு

பெரிக்காத்தான் நேஷனல் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தடை! மலாக்கா தேர்தலில் போட்டியிட அனுமதி

பெரிக்காத்தான் நேஷனல் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தடை! மலாக்கா தேர்தலில் போட்டியிட அனுமதி

மலாக்கா தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் திட்டம்

மலாக்கா தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் திட்டம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல்: 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிருக்கிறது - ஸாஹிட் ஹாமிடி அறிவிப்பு