Oct 23, 2026
Thisaigal NewsYouTube

பெரிக்காத்தான் நேஷனல் பதிவை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடையா? : ஆர்ஓஎஸ் மேல்முறையீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரிக்காத்தான் நேஷனல் பதிவை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடையா? : ஆர்ஓஎஸ் மேல்முறையீடு

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை ரத்து செய்த நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சங்கங்களின் பதிவு அலுவலகமான ஆர்ஓஎஸ்ஸும் உள்துறை அமைச்சரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அஸிஸான் அர்ஷாட் வழங்கிய தீர்ப்பு, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வழக்கின் இறுதி முடிவு வெளியாகும் வரை கூட்டணியின் பதிவை ரத்து செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில தேர்தலில் பெர்க்காத்தான் நேஷனல் சின்னத்தில் அதன் உறுப்புக்கட்சிகள் போட்டியிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஆர்ஓஎஸ் தலைமை இயக்குநர் ஸுஃபிகார் அஹ்மாட், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதை பெரிக்காத்தான் நேஷனல் தரப்பு வழக்கறிஞர் ரஃபிக் ரஷிட் அலி உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான முக்கிய அறிவிப்பு: இன்று பிற்பகலில் வெளியிடுகிறார் அபாங் ஜொஹாரி

சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான முக்கிய அறிவிப்பு: இன்று பிற்பகலில் வெளியிடுகிறார் அபாங் ஜொஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் பிரசார இயக்குநராக அப்துல் ரவூஃப் யுசோ நியமனம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் பிரசார இயக்குநராக அப்துல் ரவூஃப் யுசோ நியமனம்

“ரஃபிஸி மீது வழக்குத் தொடர்ந்தால் மக்களுக்குத்தான் சுமை!” – ரமணன் சாடல்

“ரஃபிஸி மீது வழக்குத் தொடர்ந்தால் மக்களுக்குத்தான் சுமை!” – ரமணன் சாடல்

பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் விரைவில்! பெர்சாத்துவுக்கும் அழைப்பு

பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டம் விரைவில்! பெர்சாத்துவுக்கும் அழைப்பு

பெரிக்காத்தான் நேஷனல் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தடை! மலாக்கா தேர்தலில் போட்டியிட அனுமதி

பெரிக்காத்தான் நேஷனல் பதிவு நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் தடை! மலாக்கா தேர்தலில் போட்டியிட அனுமதி

மலாக்கா தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் திட்டம்

மலாக்கா தேர்தலில் 28 தொகுதிகளில் 21 இடங்களில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் திட்டம்