Oct 24, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தானுக்கு 7 தொகுதிகள் மட்டுமே! முடிவில் உறுதியாக இருக்கும் அம்னோ தலைவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தானுக்கு 7 தொகுதிகள் மட்டுமே! முடிவில் உறுதியாக இருக்கும் அம்னோ தலைவர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் போட்டியிடாத ஏழு சட்டமன்றத் தொகுதிகளைப் பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஒதுக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

கூடுதல் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஏற்கெனவே செய்து கொண்ட உடன்பாட்டின்படி ஏழு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றார். இந்தத் தொகுதிகளைப் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

மலாக்கா தேர்தலில் பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வரும் அக்டோபர் 31ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், நவம்பர் 10ஆம் தேதி முன்கூட்டிய வாக்குப்பதிவும், நவம்பர் 14ஆம் தேதி பொது வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →