Oct 25, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டி

மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடவுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் 21 வேட்பாளர்களின் பெயர்களை அக்கூட்டணியின் தலைவரும், பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

நேற்று சனிக்கிழமை, இரவு மலாக்காவில் உள்ள ஹாங் ஜெபாட் விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்வார் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

இந்நிலையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களில், இரு இந்தியர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

காடெக் சட்டமன்றத் தொகுதியில் ஜெகசீலன் கே. மற்றும் அசஹான் சட்டமன்றத் தொகுதியில் டெனெஷ் பாலசுப்ரமணியம் ஆகியோர் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், மலாக்கா மக்களிடம் காணப்பட்ட பெருந்திரளான வருகையும் தேர்தல் மாற்றத்திற்கான அவர்களின் ஆர்வமும் நம்பிக்கையளிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஒவ்வொரு வேட்பாளரும் பக்கத்தான் ஹராப்பானின் அரசியல் போராட்டத்தையும் லட்சியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய அவர், அனைவரும் ஒரே அணியாக இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மலாக்கா மாநிலத் தேர்தலானது, வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதேவேளையில் வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 31-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தானுக்கு 7 தொகுதிகள் மட்டுமே! முடிவில் உறுதியாக இருக்கும் அம்னோ தலைவர்

மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தானுக்கு 7 தொகுதிகள் மட்டுமே! முடிவில் உறுதியாக இருக்கும் அம்னோ தலைவர்

அபு பக்காருடன் பேச்சு வார்த்தை நடத்த பெரிக்காத்தான் நேஷனல் முடிவு

அபு பக்காருடன் பேச்சு வார்த்தை நடத்த பெரிக்காத்தான் நேஷனல் முடிவு

சரவாக் சட்டமன்றம் வரும் திங்கட்கிழமை கலைப்பு: 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல்!

சரவாக் சட்டமன்றம் வரும் திங்கட்கிழமை கலைப்பு: 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல்!

பெரிக்காத்தான் நேஷனல் பதிவை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடையா? : ஆர்ஓஎஸ் மேல்முறையீடு

பெரிக்காத்தான் நேஷனல் பதிவை ரத்து செய்யும் உத்தரவுக்குத் தடையா? : ஆர்ஓஎஸ் மேல்முறையீடு

சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான முக்கிய அறிவிப்பு: இன்று பிற்பகலில் வெளியிடுகிறார் அபாங் ஜொஹாரி

சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான முக்கிய அறிவிப்பு: இன்று பிற்பகலில் வெளியிடுகிறார் அபாங் ஜொஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் பிரசார இயக்குநராக அப்துல் ரவூஃப் யுசோ நியமனம்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பாரிசான் நேஷனல் பிரசார இயக்குநராக அப்துல் ரவூஃப் யுசோ நியமனம்