Oct 25, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: 9 தொகுதிகளில் போட்டியிட்ட அமனாவுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: 9 தொகுதிகளில் போட்டியிட்ட அமனாவுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு

மலாக்கா மாநிலத் தேர்தலில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்ட அமானா கட்சிக்கு, இம்முறை ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை அக்கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் இந்த முடிவுக்குக் கட்டுப்படுவதாக அமனாவின் வியூக இயக்குநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமானா, எப்போதும் கூட்டணியாக இணைந்து செயல்பட்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள் முழுமையான ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு எடுக்கும் முடிவுகளை அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் என அவர் விவரித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய உலக மனநல தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சுல்கிஃப்லி அஹ்மாட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
16-ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழக்கும், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்கும்: சனுசி நோர் கணிப்பு

16-ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழக்கும், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்கும்: சனுசி நோர் கணிப்பு

"தொகுதிப் பங்கீட்டில் தலையிட வேண்டாம்" - ஜசெகவிற்கு மசீச தலைவர்கள் எச்சரிக்கை

"தொகுதிப் பங்கீட்டில் தலையிட வேண்டாம்" - ஜசெகவிற்கு மசீச தலைவர்கள் எச்சரிக்கை

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டி

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டி

மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தானுக்கு 7 தொகுதிகள் மட்டுமே! முடிவில் உறுதியாக இருக்கும் அம்னோ தலைவர்

மலாக்கா தேர்தல்: பெரிக்காத்தானுக்கு 7 தொகுதிகள் மட்டுமே! முடிவில் உறுதியாக இருக்கும் அம்னோ தலைவர்

அபு பக்காருடன் பேச்சு வார்த்தை நடத்த பெரிக்காத்தான் நேஷனல் முடிவு

அபு பக்காருடன் பேச்சு வார்த்தை நடத்த பெரிக்காத்தான் நேஷனல் முடிவு

சரவாக் சட்டமன்றம் வரும் திங்கட்கிழமை கலைப்பு: 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல்!

சரவாக் சட்டமன்றம் வரும் திங்கட்கிழமை கலைப்பு: 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல்!