Nov 7, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: பிஎன் தொகுதிப் பங்கீடு குறித்து இப்போதே நம்பிக்கை தெரிவிக்க முடியாது – வீ கா சியோங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: பிஎன் தொகுதிப் பங்கீடு குறித்து இப்போதே நம்பிக்கை தெரிவிக்க முடியாது – வீ கா சியோங்

மலாக்கா தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேசிய முன்னணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மசீச தனது இறுதி நிலைப்பாட்டை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, பேச்சுவார்த்தையின் முடிவு சாதகமாக இருப்பதாகக் கூறியிருந்தாலும், அந்த இலக்கை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்ததாகவும், மலாக்கா சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் மசீச தனது அதிருப்தியைத் தெளிவாகத் தெரிவித்ததாகவும் வீ கா சியோங் கூறினார்.

தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸாம்ப்ரி அப்துல் காதிர், மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூஃப் யூசோ ஆகியோர் தம்மையும் மற்றொரு மசீச தலைவரையும் இரவு 11 மணியளவில் சந்தித்ததாகவும், மறுநாள் அதிகாலை 1 மணியளவில் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி

நெகிரி செம்பிலான் அரச விவகாரம்: அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு

நெகிரி செம்பிலான் அரச விவகாரம்: அனைத்து அம்னோ உறுப்பினர்களும் இஸ்மாயில் லாசிமுக்கு ஆதரவு

தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

தீபாவளிக்காக தயாராகும் குடும்பங்களுக்கு இடையூறு வேண்டாம் - பக்காத்தான் தொண்டர்களுக்கு அட்லி ஸஹாரி அறிவுறுத்தல்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

மலாக்கா தேர்தல்: மத்திய அரசுடன் நேரடித் தொடர்புள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் – அன்வார்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; திவேட் திறன் பயிற்சிக்கு முக்கியத்துவம் – டத்தோ அஸ்மான் அபிடின்