Oct 29, 2026
Thisaigal NewsYouTube

பெரிக்காத்தான் சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக பெர்சத்துவுக்கு நெருக்கடி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெரிக்காத்தான் சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக பெர்சத்துவுக்கு நெருக்கடி

மலாக்கா மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்த பெர்சாத்து கட்சி எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை விளக்கமளிக்க வேண்டும் என திரங்கானு மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவரான அவர், தேர்தல் ஆணையத்திடம் கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் பெற்றவராக தாம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் தேர்தல்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் தனது அதிகாரப்பூர்வ சின்னத்தையே தொடர்ந்து பயன்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், பெரிக்காத்தான் கூட்டணியில் தனது நிலைப்பாடு தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் கட்சிக் கூட்டத்தில் இருந்து தன்னை ஒதுக்கியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, பெர்சாத்து கட்சிக்கும் பெரிக்காத்தான் கூட்டணிக்கும் இடையே மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மலாக்கா மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் பெர்சாத்து கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவற்றில் நான்கு தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை எதிர்த்து பெர்சாத்து போட்டியிடக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →