Oct 29, 2026
Thisaigal NewsYouTube

2027 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க பெர்சாத்து ஒப்பந்தம்; தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க பெர்சாத்து ஒப்பந்தம்; தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கும்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்காக, பெர்சாத்து கட்சி மடானி அரசாங்கத்துடன் நம்பிக்கை மற்றும் நிதி வழங்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பெர்சத்து தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களைப் போலவே தொகுதி மேம்பாட்டு நிதியைப் பெற முடியும் என்று தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தில் முஹிடின் யாசின் பெர்சத்து சார்பில் கையெழுத்திட்டார். பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்த மேலும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பெர்சாத்து துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஃபைஸால் அஸுமு, புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின், லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் சுஹைமி அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →