Oct 30, 2026
Thisaigal NewsYouTube

சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

அரசாங்கத்துக்கும் பெர்சத்து கட்சிக்கும் இடையே கையெழுத்தான நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தமான சிஎஸ்எ, எந்தவொரு கட்சியின் அரசியல் நிலைப்பாட்டையோ முடிவுகளையோ கட்டுப்படுத்தாது என்று மலாக்கா மாநில பிகேஆர் தலைவர் அடாம் அட்லி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது அரசியல் நிலைப்பாடுகளுடன் தொடர்ந்து சுதந்திரமாகச் செயல்படலாம் என்றும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் நாட்டின் வளர்ச்சியையும் வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மலாக்கா, புக்கிட் பியாத்துவில் உள்ள பக்கத்தான் ஹராப்பான் தலைமையகத் தேர்தல் நடவடிக்கை மையத்தில் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அடாம் அட்லி, வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானும், பெர்சாத்துவும் நான்கு தொகுதிகளில் நேரடியாக மோதினாலும் அதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

இதற்கிடையில், அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மலாக்கா மாநில ஜசெக தலைவர் கூ போய் தியோங், Khoo பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், ஜசெக ஏற்கனவே அறிவித்த ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் தொடர்ந்து போட்டியிடும் என்றார்.

முன்னதாக, பக்காத்தான் ஹராப்பானும், பெர்சாத்துவும் ஆயர் குரோ, கிளேபாங்,, காடேக் மற்றும் பெங்காலான் பத்து ஆகிய நான்கு தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு மாமன்னரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை – மந்திரி பெசார்

சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு மாமன்னரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை – மந்திரி பெசார்

அரசியல் ஒத்துழைப்பு புதியதல்ல; மக்களே மிகப் பெரிய வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் – ஃபூஸியா சாலே

அரசியல் ஒத்துழைப்பு புதியதல்ல; மக்களே மிகப் பெரிய வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் – ஃபூஸியா சாலே

மலாக்கா மாநிலத் தேர்தல்: 6 தொகுதிகளில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை அறிவித்தது பெரிக்காத்தான் நேஷனல்

மலாக்கா மாநிலத் தேர்தல்: 6 தொகுதிகளில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை அறிவித்தது பெரிக்காத்தான் நேஷனல்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்ததா? – அருள் குமார்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்ததா? – அருள் குமார்

மலாக்கா தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிகேஆர்

எதிர்க்கட்சிகளுடனும் கண்ணியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது மடானி அரசாங்கம் – யுனேஸ்வரன்

எதிர்க்கட்சிகளுடனும் கண்ணியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது மடானி அரசாங்கம் – யுனேஸ்வரன்