Oct 30, 2026
Thisaigal NewsYouTube

சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு மாமன்னரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை – மந்திரி பெசார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு மாமன்னரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை – மந்திரி பெசார்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் நடைபெறும் தேதிக்கு, மாநில ஆட்சியாளர் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸின் ஒப்புதலை இன்னும் பெறவில்லை என்று மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நவம்பர் 26ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரையும், மறுநாள் நவம்பர் 27ஆம் தேதி மாநில வரவு செலவுத் திட்டத்தையும் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான ஒப்புதலைப் பெறும் முயற்சி நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

நேற்று சிரம்பானில் நடைபெற்ற பெர்பாத்தே ஃபெஸ்ட் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்மாயில் லாசிம், நவம்பர் 27ஆம் தேதி அல்லது அதையொட்டிய நாளில் கூட்டத்தொடர் நடைபெறலாம் என்றார்.

இதற்கிடையில், ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இதுவரை அறிவிப்பு கிடைக்கவில்லை என்றும் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள் குமார் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

அரசியல் ஒத்துழைப்பு புதியதல்ல; மக்களே மிகப் பெரிய வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் – ஃபூஸியா சாலே

அரசியல் ஒத்துழைப்பு புதியதல்ல; மக்களே மிகப் பெரிய வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் – ஃபூஸியா சாலே

மலாக்கா மாநிலத் தேர்தல்: 6 தொகுதிகளில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை அறிவித்தது பெரிக்காத்தான் நேஷனல்

மலாக்கா மாநிலத் தேர்தல்: 6 தொகுதிகளில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை அறிவித்தது பெரிக்காத்தான் நேஷனல்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்ததா? – அருள் குமார்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்ததா? – அருள் குமார்

மலாக்கா தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிகேஆர்

எதிர்க்கட்சிகளுடனும் கண்ணியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது மடானி அரசாங்கம் – யுனேஸ்வரன்

எதிர்க்கட்சிகளுடனும் கண்ணியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது மடானி அரசாங்கம் – யுனேஸ்வரன்