வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களில் ஐந்து பேரை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவித்துள்ளது.
அதன்படி, மலாக்கா வாவாசான் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் யாட்ஸில் யாக்கோப், பெம்பான் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேவேளையில், ஜசெக கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஆயர் கெரோ தொகுதியில் மலாக்கா கெராக்கான் தலைவர் மைக்கல் கான் களமிறங்குகிறார்.
ஹாங் துவா ஜெயா பாஸ் குழு உறுப்பினர் ரிட்ஸுவான் சாரிஃப், புக்கிட் காத்தில் தொகுதியிலும், தங்கா பத்து பாஸ் துணைத் தலைவர் ராஃபி அஹ்மாட், பாயா ரும்புட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மேலும், கோத்தா மலாக்கா வாவாசான் துணைத் தலைவர் ஆல்பெர்ட் கோக், கெசிடாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
எஞ்சியுள்ள கோத்தா லக்சமனா தொகுதிக்கான வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இன்னும் அறிவிக்கவில்லை.
அந்த தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று மலாக்காவில் நேற்று இரவு நடைபெற்ற வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.








