Oct 31, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: கிளேபாங் தொகுதியில் நான்கு முனைப் போட்டி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: கிளேபாங் தொகுதியில் நான்கு முனைப் போட்டி

மசீச உதவித் தலைவர் லிம் பான் ஹோங், வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், கிளேபாங் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறும் நோக்கில் களமிறங்குகிறார்.

இத்தொகுதியில் அவருக்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் லிம் பான் ஹோங்கை எதிர்த்து, பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஃபார்ஸானா ஹயானி நாசீர், பெர்சத்து கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேலவை துணைத் தலைவர் அலி முஹமட், பெர்சாமா கட்சியின் யங் ஜீ யு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், கிளேபாங் தொகுதியில் மலாய் வாக்காளர்கள் 66.9 விழுக்காட்டினரும், சீன வாக்காளர்கள் 28.6 விழுக்காட்டினரும், இந்திய வாக்காளர்கள் 2.3 விழுக்காட்டினரும் உள்ளனர்.

லிம் பான் ஹோங் கடந்த 2013-ஆம் ஆண்டு முதன்முறையாக கிளேபாங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிகேஆர் கட்சியிடம் அத்தொகுதியை இழந்தார்.

இதனையடுத்து, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, அப்போது பிகேஆர் சார்பில் பதவி வகித்த சட்டமன்ற உறுப்பினரை 876 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்து தொகுதியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தலில் பயா ரூம்புட் தொகுதியில் மும்முனைப் போட்டி - அன்வாரின் அரசியல் செயலாளர் களமிறங்குகிறார்

மலாக்கா தேர்தலில் பயா ரூம்புட் தொகுதியில் மும்முனைப் போட்டி - அன்வாரின் அரசியல் செயலாளர் களமிறங்குகிறார்

பலமுனைப் போட்டி பக்கத்தான் ஹராப்பானுக்கு சாதகமாக அமையும் – அட்லி ஸஹாரி

பலமுனைப் போட்டி பக்கத்தான் ஹராப்பானுக்கு சாதகமாக அமையும் – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டி: 24 வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டி: 24 வேட்பாளர்கள் அறிவிப்பு

சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

சிஎஸ்எ ஒப்பந்தம், தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்தாது: பெர்சாத்துவுடன் நான்கு தொகுதிகளில் மோதினாலும் பிரச்சினையில்லை – பிகேஆர் கூறுகிறது

சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு மாமன்னரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை – மந்திரி பெசார்

சட்டமன்றக் கூட்டத் தேதிக்கு மாமன்னரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை – மந்திரி பெசார்

அரசியல் ஒத்துழைப்பு புதியதல்ல; மக்களே மிகப் பெரிய வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் – ஃபூஸியா சாலே

அரசியல் ஒத்துழைப்பு புதியதல்ல; மக்களே மிகப் பெரிய வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் – ஃபூஸியா சாலே